ஈரானில் 176 பேரை பலிவாங்கிய விமான விபத்துக்கு பின்னால் இராணுவ நடவடிக்கையா? வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் பிரித்தானிய, கனேடிய பயணிகள் உள்ளிட்ட 176 பேரை பலிவாங்கிய விமான விபத்தானது இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தின் அருகாமையிலேயே உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானது.

176 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திர கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்து விமானம் விபத்துள்ளானது என முதற்கட்ட தகவல் வெளியானது.

ஆனால் தற்போது, குறித்த விமானமானது இராணுவ நடவடிக்கையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம், அல்லது துரதிஷ்டவசமாக இராணுவ நடவடிக்கையில் சிக்கியிருக்கலாம் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஈராக்கில் அமைந்துள்ள அல் ஆசாத் இராணுவ தளம் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.

குறித்த தாக்குதலின் அடுத்த சில நிமிடங்களில் ஈரானிய வான்பரப்பில் ஏராளமான ஆளில்லா விமானங்கள் பறக்க விடப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமான தாக்குதலில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் ஈரான் முன்னிலை வகித்து வருகிறது.

ஈரானின் குத்ஸ் படையில் இதற்கென சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஏவுகணை தாக்குதலை அடுத்து பறக்க விடப்பட்ட ட்ரோன்கள் அளவில் சிறிது என்பதால் விமானிகளின் பார்வையில் இவை சிக்குவதில்லை.

அவ்வாறான ஆளில்லா விமானம் ஒன்றுடன் மோதி இந்த பயணிகள் விமானமானது விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்பது நிபுணர்களின் சந்தேகமாக உள்ளது.

மட்டுமின்றி, தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏதும் இருந்ததாக நிபுணர்கள் நம்ப மறுத்துள்ளனர்.

இருப்பினும், குறித்த விமான விபத்தானது ட்ரோன்களால் நேர்ந்ததா என்பது தீவிர ஆய்வின் அடிப்படையிலேயே தெரியவரும் என்கின்றனர் நிபுணர்கள்.

மட்டுமின்றி ஈரான் அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்த அடுத்த சில நிமிடங்களில் பயணிகள் விமானமும் விபத்துக்கு உள்ளானதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...