அமெரிக்கா எங்கள் எதிரி! அந்நாட்டு முகத்தில் விழுந்த அடி... தாக்குதலுக்கு பின்னர் ஈரான் உச்சத்தலைவரின் பேச்சு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாக ஈரான் உச்சத்தலைவர் கூறியுள்ளார்.

பாக்தாத்தில் அமெரிக்க துருப்புக்கள் வசிக்கும் தளங்களில் 12க்கும் அதிகமான ராக்கெட்களை வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின.

இதனிடையில் எங்களை சீண்டாதீர்கள் என கூறும் வகையில், உலகிலேயே எங்களிடம் தான் சக்தி வாய்ந்த இராணுவம் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈராக்குக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து முதல்முறையாக அந்நாட்டின் சார்பில் பேசப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஈரானின் உச்சத்தலைவர் Ali Khamenei, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் குவாசிம் கொலையை அடுத்து ஈரானின் புரட்சி உயிருடன் இருப்பது தெளிவாகிறது.

ஈரான் நடத்திய தாக்குதல் அமெரிக்காவுக்கு பதிலடி மட்டுமில்லாமல், வல்லரசு நாடான அமெரிக்கா முகத்தில் விழுந்த அடியாகும், அமெரிக்கா ஈரானின் எதிரி, இதோடு இஸ்ரேலும் எதிரி என கூறினார்.

அவர் பேசும் நேரலை வீடியோ,

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...