நேரடியாக தாக்குங்கள்! ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் உத்தரவு: பதற்றம் அதிகரிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

குவாசிம் சுலைமானியின் மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்காவிற்கு வலியை கொடுக்க வேண்டும், அதற்கு நேரடியாக தாக்குதலை நடத்த வேண்டும் என்று ஈரானின் உச்சதலைவர் ஆயத்துல்லா காமெனி உத்தரவிட்டுள்ளார்..

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் கடந்த வியாழக்கிழமை ஈரானின் புரட்சிகர தளபதி குவாசிம் சுலைமான் கொலை செய்யப்பட்டார்.

நாட்டின் தளபதிய இழந்துள்ளதால், ஈரான் நாட்டு தலைவர்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதையடுத்து நேற்றும் குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரில் நடைபெற்றது.

இந்நிலையில் குவாசிம் சுலைமானியின் மரணத்திற்கு பின், ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டிய நாட்டின் உச்சதலைவர் ஆயத்துல்லா காமெனி, குவாசிம் மரணத்திற்கு பழி தீக்கும் விதமாக மறை முகமாக எந்த ஒரு தாக்குதலை நடத்தாமல் ஈரான் இராணுவம் நேரடியாக தாக்குதலில் இறங்க வேண்டும். இதை ஈரான் இராணுவம் தான் செய்தது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன் பின்னர் தான் அமெரிக்க இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...