காணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள்: அலமாரிக்குள் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உக்ரைனில் காணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள், அலமாரி ஒன்றிற்குள் அழுகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

உக்ரைனில் Mariya Kaminina (19) மற்றும் Evelina Lisenko(16) என்னும் இரண்டு இளம்பெண்கள் காணாமல் போனார்கள்.

அவர்களது பெற்றோரின் புகாரின் பேரில், பொலிசார் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், விடுமுறைக்காக சென்றிருந்த அவர்கள் இருவரும் வாடகைக்கு எடுத்திருந்த அறையின் அலமாரியில், பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்த ஒரு மூட்டைக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று சேர்த்து டேப்பினால் சுற்றிவைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களது கைகளில் கைவிலங்கும் போடப்பட்டிருந்தது.

இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளன.

உடல் முழுவதும் கத்திக்குத்துக்காயங்களும் காணப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடிப்பதற்காக அவர்களை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அதன் பேரில், கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒரு தம்பதியை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...