ஈராக்கில் பதற்றமான சூழல்! அங்குள்ள 25,000 இந்தியர்களின் நிலை என்ன? வெளியான விளக்கம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈராக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள 25,000 இந்தியர்களின் நிலை குறித்து தூதரகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ஈராக்கில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்த தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில் பெருமளவில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் காரணமாக ஈராக்கில் பணிபுரிபவர்கள் தலைநகர் பாக்தாத் மற்றும் தெற்கு துறைமுக நகரமாக பாஸ்ராவில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஐ.நா தூதரை தொடர்பு கொண்டது.

அவர் கூறுகையில், இங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. எல்லா இடங்களிலும் பீதியான சூழல் நிலவி உள்ளது. ஆனால் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை என்னால் உணர்த்த முடியம்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.மேலும் ஈராக்கில் இயல்பு நிலை மீண்டும் திரும்பும் வரை புதிததாக யாரும் இந்தியாவிலிருந்து வேலைக்கு வரவேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...