ஈரானின் அதிரடி தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? அதிர்ச்சி எண்ணிக்கை வெளியிடப்பட்டது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அந்நாட்டு தெரிவித்துள்ளது.

ஆனால் இதில் திடீர் திருப்பமாக ஈரான் தொலைக்காட்சியில் அமெரிக்காவை சேர்ந்த 80 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய குழப்பதையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களின் இறப்பு குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...