ஈரான் தளபதி குவாசிம் இருந்த காரை தூள் தூளாக்கிய அமெரிக்கா! வெளியான திகில் வீடியோவின் உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா படையினர் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி காரில் சென்ற போது நடத்திய தாக்குதலின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க படையினர் ஈரானின் புரட்சிகர தளபதி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றனர். இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இருநாடுகளும் தொடர்ந்து ஆக்ரோசமாக பேசி வருவதால், மூன்றாம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் உலகநாடுகளுடையே ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாகவே இரு நாடுகளும் பொறுமையை கையாள வேண்டும் என்று உலக நாடுகள் கூறி வருகின்றன.

இதற்கிடையில் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பக்தாத் விமானநிலையத்தில் இருந்து வெளியே காரில் சென்று கொண்டிருந்த குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படையினர் தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை விஷான் பிரகாஷ் என்பவர் பேஸ்புக் பக்கத்தி, சுலைமானியை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்கும் வீடியோ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இது உண்மையான வீடியோ கிடையாது. சுமார் 1 நிமிடம் 41 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை ஒரு விளையாட்டு கேம் என்று குறிப்பிட்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலையில், இது போன்ற போலி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் கடந்த காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...