எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால்! போரை நாடுகிறோமா? அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் Javad Zarif விளக்கமளித்துள்ளார்.

பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்து மிரட்டும் வகையில் எங்களிடம் உலகிலேயே சக்திவாய்ந்த இராணுவம் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் Javad Zarif டுவிட்டரில், ஐ.நா. சாசனத்தின் 51 வது பிரிவின் கீழ் தற்காப்புக்கான விகிதாசார நடவடிக்கைகளை தான் ஈரான் எடுத்து முடித்தது,

எங்கள் குடிமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது.

நாங்கள் போரை நாடவோ அல்லது எதிர்பார்க்கவோ இல்லை, ஆனால் எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து நாங்கள் தற்காத்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...