டிரம்ப் படுகொலை செய்யப்படுவதை போன்று ஈரானில் வெளியான சர்ச்சை வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படுகொலையை சித்தரிக்கும் வீடியோ ஒன்றினை ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈரானிய இராணுவத்தின் உயர்படை தளபதியான குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரானிற்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்ற சூழ்நிலையை உலகம் உற்றுக்கவனித்து வருகிறது.

நட்பு நாடுகள் பலவும் பதட்டத்தை குறைப்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக பலரால் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (FNA) திங்களன்று குறுகிய வீடியோ ஒன்றினை வெளியிட்டது.

வீடியோவை காண...

ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் தனது துப்பாக்கியுடன், சுலைமானியின் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பிப்பார். அதன்பிறகு அமெரிக்க ஜனாதிபதியை நோக்கமாகக் கொண்டு துப்பாக்கியால் சுடுகிறார்.

அதில், “ஏய் அமெரிக்கா! நீங்கள் போரை துவங்கினால், நாங்கள் அதை முடிப்போம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் டிரம்ப் மற்றும் இரண்டு ரகசிய சேவை முகவர்கள் தரையில் விழுந்து கிடப்பதைக் காணலாம்.

இந்த வீடியோ காட்சியானது நவம்பர் 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...