துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஈராக்கிற்கு கடிதம் அனுப்பிய அமெரிக்கா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஈராக்கிற்கு அமெரிக்காவிடம் இருந்து கடிதம் வந்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஈராக்கிலிருந்து தனது இராணுவத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க இராணுவத்திடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது என்று பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

கடிதத்தின் ஆங்கிலம் மற்றும் அரபு மொழி பதிப்புகள் ஒரே மாதிரியானவை அல்ல, எனகூறியதோடு ஈராக் விளக்கங்களை கோரியுள்ளதாக அப்துல் மஹ்தி அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதியை, அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானம் கொன்ற பின்னர், ஈராக்கில் இருந்து அனைத்து வெளிநாட்டு துருப்புக்களையும் நாட்டிலிருந்து திரும்பப் பெறக் கோரும் தீர்மானத்தை ஈராக் நாடாளுமன்றம் ஆதரித்தது. அதனை தொடர்ந்தே இந்த கடிதம் வந்துள்ளது.

Reuters
ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஈராக் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி மற்றும் ஆதரவு கொடுப்பதற்காக, அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக வெளிநாட்டுப் படைகள் ஈராக்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...