அடுத்த 10 ஆண்டுகளும் சீனா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கிடையாது! பிரித்தானியா நிபுணர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கடந்த 10 ஆண்டுகள் சீனாவுக்குரியதாக இருந்தது போன்று, எதிர் வரும் 10 ஆண்டுகளும் சீனாவுக்கானதாகவே இருக்கும் இன்று பிரித்தானியாவின் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை ஆய்வாளர் மார்தின் ஜேர்க்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை ஆய்வாளர் மார்தின் ஜேர்க்ஸ், கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி பிரபல ஆங்கில ஊடகமான தி கார்டியன் இணையத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவே முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.

இதில், அமெரிக்கா அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழ்தல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்நெருக்கடி நடப்பு நூற்றாண்டிலும் தொடரும் என்றும் குறிப்பிடுள்ளார்.

மேலும் சீன மக்கள், விரைவான சீர்திருத்தம் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கத்துக்குப் பழகிக் கொண்டுள்ளனர். ஆழ்ந்த ஞானம் கொண்ட சீனப் பண்பாட்டின்படி கற்றுக்கொள்வது மற்றும் கல்வி மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கட்டுரை, தவறான அல்லது மறைமுக நோக்கத்துடனான பொய்களோ இல்லாமல், மேலை நாடுகளின் ஊடகங்கள் வெளியிட்ட அரிய புறநிலை கட்டுரையாகும் என்று இணையப் பயன்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...