தளபதி குவாசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் பயங்கரம்... 35 பேர் பலி! திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் சிக்கி 35 பேர் காயம் அடைந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் உடல் நேற்று தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு, நாட்டின் உச்ச தலைவர் கமேனி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தெஹ்ரானில் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, சுலைமானியின் உடல் அடக்கம் செய்ய சொந்த ஊரான கெர்மனுக்கு இன்று அதிகாலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

கெர்மனில் நடந்த சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, கெர்மனில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.. அனைவரும் மூச்சுதிணிறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், மருத்துவ குழு சார்பில், 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...