ஐஆர்655 நாங்கள் இன்னும் மறக்கவில்லை! மிரட்டல் வேண்டாம்: அமெரிக்காவின் ஆட்டத்தை எச்சரித்த ஈரான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா ஈரானின் 52 முக்கிய இடங்களை தகர்த்துவிடுவேன் என்று ஒரு போதும் மிட்ட முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளும் படி ஈரான் அதிபர் ஹசன் ருஹானி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் கடந்த வாரம் ஆளில்ல விமானம் மூலம் ஈரானின் பாக்தாத் விமானநிலையத்திற்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்த ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரை தாக்கி கொன்றது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே தற்போது வார்த்தை போர் முற்றியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஈரானில் 52 முக்கியமான இடங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது.

அமெரிக்கர்களைத் தாக்கினாலோ அல்லது அமெரிக்கச் சொத்துக்களைச் சேதப்படுத்தினாலோ ஈரானிய கலாச்சாரத்துக்கும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம். அமெரிக்காவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் அளிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 52 இடங்களைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்து கருத்துப் பதிவிட்டவர்கள் 290 என்ற எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். #ஐஆர்655 ஒருபோதும் ஈரான் நாட்டை மிரட்டல் விடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 1988-ஆம் ஆண்டு, தெஹ்ரானில் இருந்து துபாய்க்கு ஈரான் 655 என்ற பயணிகள் விமானம் சென்றது. அப்போது ஈரானின் கடற்பகுதிக்குள் பெர்சியன் வளைகுடாவில் விமானம் பறந்தபோது அமெரிக்காவின் வின்செனஸ் போர்க்கப்பல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.

இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து அப்போது ஈரான் பிரச்சினை எழுப்பியபோது, தவறுதலாகச் சுட்டுவிட்டோம் என்று பதில் அளித்தது. இந்த விவகாரத்தை அதிபர் ருஹானி நினைவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...