தளபதி குவாசிமுக்கு துக்கம் தெரிவிக்க வலுக்கட்டாயமாக அழவைக்கப்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள்! அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

குவாசிம் மரணத்தை தொடர்ந்து ஈரானில் உள்ள பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, அழவைக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து குவாசிம் சுலைமானியின் உடல் பயணிகள் விமானம் மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் குவாசிம் மரணத்தை தொடர்ந்து ஈரானில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் வலுகட்டாயமாக வரிசையில் நிற்கவைக்கப்பட்டு அழுவதற்கு கட்டாயப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அழுகை வரவில்லை என்றாலும் அழுவது போல நடித்து துக்கத்தை வெளிப்படுத்த கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் வட கொரியாவுக்கும், ஈரானுக்கும் எதாவது வித்தியாசம் உண்டா என காட்டமாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்