டிரம்ப்..! இதுபோன்று உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கிறீர்களா? அமெரிக்காவின் அழிவு ஆரம்பம்: அதிர வைத்த ஈரான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது.

குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டனர்.

மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்ற குவாசிமின் இறுதி ஊர்வலத்தின் புகைப்படத்தை ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீப் தனது ட்விட்டரில் பகிர்ந்தார்.

டிரம்ப்.. நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற மனிதகுலத்தின் கடலை பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் இன்னும் எங்கள் பிராந்தியத்தில் உள்ள கோமாளிகள் வழங்கும் ஆலேசானையை கேட்க விரும்புகிறீர்களா?

இந்த பெரிய தேசத்தின் மற்றும் அதன் மக்களின் விருப்பத்தை உடைக்க முடியும் என்று நீங்கள் இன்னும் கற்பனை செய்கிறீர்களா?

மேற்கு ஆசியாவில் தீய அமெரிக்காவின் அழிவு தொடங்கியது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்