குவாசிம் சுலைமான் மரணம்... அச்சுறுத்தல்! பாகிஸ்தான் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நிலையில், இது குறித்து பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

ஈரான் தளபதி குவாசிம் நேற்று முன் தினம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் மூன்று நாட்கள் துக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அவரின் இறுதிச்சடங்கு தெஹ்ரானில் நடைபெற்றது.

இந்நிலையில் குவாசிம் கொலை செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தால், மத்திய கிழக்கின் பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதியை அச்சுறுத்தியுள்ளது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும், நிலைமையை குறைக்க ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Shireen Mazari கூறுகையில், இறையாண்மைக்கான மரியாதை மற்றும் பிராந்தியந்தியத்திற்கான ஒருமைப்பாடு ஆகியவை ஐ.நா. சாசனத்தின் அடிப்படைக் கொள்கை, இதை கடைபிடிக்க வேண்டும்.

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மற்றும் பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், அதுமட்டுமின்றி ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்