போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் துரதிஷ்ட விபத்துகளை சந்திக்க காரணம்... குழு வெளியிட்ட முக்கிய தகவல்!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

போயிங் கோ மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இணைந்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களில், விபத்தை உருவாக்கும் காரணிகள் குறித்து கண்டறிந்துள்ளன.

போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோபியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் விபத்திற்குள்ளாகி பெரிய உயிரிழப்பை சந்தித்தது.

இதனை அடுத்து பல நாடுகளும் அதன் பயன்பாட்டை நிறுத்தின. பல நாடுகள் விமான நிலையங்களில் தரையிறக்கவே அனுமதிக்கவில்லை. இதனால், அந்நிறுவனம், விமான ரக உற்பத்தியை நிறுத்தியது.

இந்நிலையில், அந்த விமானத்தில் உள்ள குறைபாட்டை போயிங் கோ, பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனுடன் இணைந்து கண்டறிந்துள்ளது. அதில் அந்த விமானங்களில் பயன்படுத்தப்படும் வெயர்களினால் ஷாட் ஷர்கீயூட் ஏற்பட்டு இந்த விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The New York Time வெளியிட்டுள்ள செய்தியில், போயிங் விமானத்தில் இரண்டு சுற்று வெயர்கள் இணைந்துள்ளது. இதில் ஏற்பட்ட ஷாட் ஷர்கீயூடில், விமானியால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Reuters வெளியிட்ட செய்தியில், இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்தாலும் உடனடியாக பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க வாய்ப்பிலை என்றும், மார்ச் மாதத்திற்கு பின் அதன் பயன்பாட்டை அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

போயிங் வாரியம் தலைமை நிர்வாகி டென்னிஸ் மியூலன்பர்க்கை அந்நிறுவனம், விபத்திற்கு பின் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்ய தவறியதாக பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்