குவாசிம் இறுதிச்சடங்கில் எச்சரித்த அவரது மகள்! அமெரிக்கா கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ள வேண்டும்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி இறுதிச்சடங்கின் போது அவரது மகள் எதிரிகள் தன்னுடைய அப்பாவின் உடலைப் பார்த்து இப்போது வரை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியிடன் உடல் பயணிகள் விமானம் மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரின் உடலுக்கான இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் அதிகம் பேர் கலந்து கொண்ட இறுதிச்சடங்காக இது இருக்கும் என்றும், அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் தங்களுடைய உடலில் கொடிகை போர்த்தியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த இறுதிச்சடங்கின் போது பேசிய குவாசிம் சுலைமானின் மகள், தன்னுடைய தந்தையின் மரணம் பிராந்தியத்தில் ஒரு விழிப்புணரவுக்கு வழிவகுக்கும் என்பதை அமெரிக்கா கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி அவரின் உடலை பார்த்து எதிரிகள் இப்போது வரை பயப்படுவதாக கூறியுள்ளார்.

அரசியல் தலைவர் ஹமாஸ் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். அவர், அமெரிக்காவின் கொடூரமான குற்றம், இது மிருகத்தனமான முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது . இந்த கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைத் தண்டிக்க உலகம் முழுவதும் ஒன்று சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்