பயணிகள் விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சுலைமானியின் உடல்: நாளை சொந்த ஊரில் இறுதிச்சடங்கு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்படும் நிலையில், அவரது உடல் சரக்கு விமானத்திற்கு பதிலாக பயணிகள் விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக இறந்தவர்கள் உடல்களை சரக்கு விமானங்களில் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் அமெரிக்க வான்வெளித்தாக்குதலில் பாக்தாதில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் உடல், பயணிகள் விமானம் ஒன்றில் இருக்கைகள் மீது வைத்து கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு கொண்டுவரப்படும் சுலைமானியின் உடலுக்கு இன்று (திங்கட்கிழமை) ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா காமெனி அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

அதன் பிறகு பிரார்த்தனைக்காக புனித நகரமான Qom நகருக்கு சுலைமானியின் உடல் கொண்டுசெல்லப்பட்டபின், அவரது சொந்த ஊரான Kermanக்கு கொண்டுசெல்லப்பட்டு நாளை அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட உள்ளது.

வெள்ளியன்று அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்