எங்களை எந்த வித நிர்பந்தங்களும் கட்டுப்படுத்தது... ஈரான் அரசு அதிரடி முடிவு! பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள்?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவதாக 2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறுத்துவதாக ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி ஈரான் பாதுகாப்பு தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்க பாதுகாப்பு படையால், ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

இதனை அடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரான் கடும் எச்சரிக்கைகளை விடுத்தது.

இந்நிலையில், முன்னதாக 2015ஆம் ஆண்டில் ஈரானுடன், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா இங்கிலாந்து ஆகிய ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஜெர்மனி ஆகிய நாடுகள் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த ஒப்பந்தம் போட்டன.

ஆனால், இந்த ஒப்பந்ததில் இருந்து அமெரிக்க அதிபர், டொனால் டிரம் வெளியேறுவதாக அறிவித்தார். இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடையை விதித்தது.

இதனை அடுத்து ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதால், தற்போது இந்த ஒப்பந்ததிற்கு தாங்கள் கீழ்படிய போவதில்லை என்றும், எந்த நிற்பந்தமும் தங்களை கட்டுப்படுதாது என்றும், யுரேனிய செறிவூட்டல் திறனை தாங்கள் குறைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜெர்மன் சேன்சிலர் ஏஞ்சிலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மற்றும் பிரித்தானியா பிரதமர் போரீஸ் ஜான்சன் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டனர்.

அதில் “இரான் தனது முடிவை கைவிட வேண்டும்” என வலியுறுத்தினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்