அமெரிக்க ஏவுகணை ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியை தாக்கும் திகிலூட்டும் காட்சிகள் வெளியானது

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் ஏவுகணை பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய தளபதி குாவசிம் சுலைமானியை தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளிவந்துள்ளன.

குவாசிம் சுலைமானியை கணை தாக்கிய சரியான தருணத்தைக் காண்பிக்கும் திகிலூட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாக்தாத் தூதரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானிய தளபதி குவாசிம் கொல்லப்பட்டார்.

ஈரானின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த இராணுவத் தளபதியின் மரணத்திற்கு "கடுமையாக பழிவாங்குவோம்" என ஈரான் உச்ச தலைவர் கமேனி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

நடுங்க வைக்கும் வீடியோவில், உரத்த குண்டு வெடிப்புகள் மற்றும் கூச்சல்கள் கேட்கிறது. கட்டிடத்திற்குள் ஒளிந்த படி குறித்த நபர்கள் இந்த வீடியோவை படமாக்கியுள்ளனர்.

அதில், சிறிது தொலைவில் உள்ள பகுதியில் ஏவுகணை தாக்கி வெடித்து சிதறுகிறது. அத்துடன் சிசிடிவி-யில் பதிவான மற்றொரு காட்சியும் வெளியாகியுள்ளது.

பாக்தாத் விமான நிலையத்தைச் சுற்றி குாவசிம் சுலைமானி மற்றும் ஈராக் துணை இராணுவத் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸை இருந்த பகுதி அது என்று நம்பப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers