அல்பேனியாவை பேரழிவுக்குள்ளாக்கிய பூகம்பத்தில் பிரதமரின் வருங்கால மருமகள் பலி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அல்பேனியா நாட்டில் பூகம்பத்தில் பலியான 49 பேருடன் சேர்ந்து பிரதமரின் வருங்கால மருமகளும் உயிரிழந்துள்ளார்.

அல்பேனியா நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 5.0 ரிக்டர் அளவில் ஆரம்பித்த நிலநடுக்கமானது தற்போது வரை 500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான கட்டிடங்களும், குடியிருப்பு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. மீட்புப்படை வீரர்களும் விரைந்து செயல்பட்டு வரும் வேளையில், நிலநடுக்கமும் தொடர்ந்துகொண்டே வருவதால் மோசமாக சேதமடைந்த நகரமான துமனேயில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இடர்பாடுகளுக்கு மத்தியில் சடலங்களும் மீட்கப்பட்டுக்கொண்டே வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்றுவரை 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் எடி ராமா கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரதமரின் மகன் கிரிகோர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், தனது வருங்கால மனைவி கிறிஸ்டி ரெசி (25) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் அவரது தந்தை எட்வார்ட், தாய் டோலோரா மற்றும் சகோதரர் கிளாஸ் ஆகியோருடன் இறந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...