முக்கிய சந்தைப் பகுதியில் மர்ம நபரின் வெறியாட்டம்: ஆபத்தான நிலையில் மூன்று சிறார்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள முக்கிய சந்தைப் பகுதியில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை கத்தியால் தாக்கியதில் மூன்று சிறார்கள் காயம்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தியால் தாக்கிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து மாயமான நபரை டச்சு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மூவரும் சிறார்கள் என குறிப்பிட்ட பொலிசார், அவர்களின் வயதை குறிப்பிட மறுத்துள்ளனர்.

மேலும் அவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலானது தீவிரவாதத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாக கருதவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாங்கள் திறந்த மனதுடன் அனைத்து சாத்தியங்களையும் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார்,

ஆனால் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடியதால், தாக்குதல்தாரியும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...