20 குடும்பங்கள் வேண்டாம் என ஒதுக்கிய குழந்தைக்கு இறுதியில் கிடைத்த அடைக்கலம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

20 குடும்பங்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தையை இத்தாலியை சேர்ந்த ஒரு தந்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இத்தாலியை சேர்ந்த ஒரு தாய் தனக்கு பிறந்த ஆல்பா என்கிற குழந்தை மனவளர்ச்சி குறைபாடுடன் இருந்ததால், காப்பகம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்பிறகு குழந்தை தத்தெடுப்பிற்காக வந்த 20 குடும்பத்தினர், ஆல்பாவை வேண்டாம் என ஒதுக்கியுள்ளனர்.

இறுதியாக குழந்தை பிறந்து 13 நாட்கள் கழிந்திருந்த நிலையில், 2017ம் ஆண்டு அன்று நேபிள்ஸைச் சேர்ந்த லூகா டிராபனீஸ் (41) என்பவர் அரச விதிமுறைகளின்படி ஆல்பாவை தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து லூகா டிராபனீஸ் கூறுகையில், நான் 14 வயது முதலே தன்னார்வமாக ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்து வந்தேன்.

எனவே ஆல்பாவையும் என்னால் கவனித்துக்கொள்ள முடியும் என்றும், அதற்கான சரியான அறிவும் அனுபவமும் இருப்பதாக உணர்ந்தேன்.

“நான் அவளை முதன்முதலில் என் கைகளில் பிடித்தபோது பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த தருணமே அவளை என்னுடைய மகளாக உணர்ந்தேன். புதிதாகப் பிறந்த குழந்தையை நான் வைத்திருப்பது இதுவே முதல் முறை. அந்த தருணத்திற்கு முன்பு, குழந்தையை வைத்திருப்பதற்கு நான் பயப்படுவேன்".

ஆனால், நான் முதலில் ஆல்பாவை தூக்கியபோது, ​​அவளுடைய அப்பாவாக இருக்க தயாராக இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டேன்.”

ஆல்பா என்னுடைய வாழ்க்கையில் புது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாள். அவளை சுற்றியே என் உலகம் உள்ளது. அவள் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவு உணர்வையும் கொண்டு வந்தாள், அவளுடைய அப்பாவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்