கோமாவிலிருந்த தாய்... பால் கேட்டு அழுத குழந்தை: அடுத்து நடந்த அற்புதம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

30 நாட்களாக கோமாவிலிருந்த ஒரு பெண், தன் குழந்தை பால் கேட்பதை அறிந்ததும் தாமாக எழுந்து பாலூட்டிய அற்புதம் ஒன்று அர்ஜெண்டினாவில் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஒருவர் தாக்கியதையடுத்து, கீழே விழுந்து தலையில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்று செயலற்ற நிலையிலிருந்தார் Maria Laura Ferreyra (42).

அவரது நிலை கண்டு இனி அவர் எழும்ப மாட்டார் என்று முடிவு செய்து அவரது உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுள்ளனர் மருத்துவர்கள். அவரது கணவரான Martin Delgado, அந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு மிக மிக வேதனையாக இருந்ததாக தெரிவிக்கிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த Mariaவின் கடைசி மகள், தாயின் அருகே அமர்ந்து பால் கேட்டிருக்கிறாள்.

உடனே குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்து, ஒரு தாயின் வழக்கப்படி தாய்ப்பாலூட்டியிருக்கிறார் Maria.

ஒரு மாதமாக கோமாவிலிருந்த Maria, குழந்தையை தன்னருகே படுக்கவைத்து தாய்ப்பாலூட்டியதைக் கண்டதும், குடும்பமே ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கதறி அழுதிருக்கிறது.

அது ஒரு அற்புதம், அதுதான் தாய்மை உணர்வு, அதைக்கண்டதும் நாங்கள் எல்லாம் கதறிவிட்டோம் என்கிறார் Martin.

Maria இன்னமும் முழுமையாக சுய உணர்வுக்கு வரவில்லை, என்றாலும் மகளை அடையாளம் கண்டு கோமாவுக்கு முன் அவர் அவளை எப்படி நடத்துவாரோ அதே போல் நடந்துகொண்டதால், எல்லாம் சரியாகிவிடும் என அவரது கணவர் நம்புகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்