குழந்தையின் சடலத்தை தர மறுத்த மருத்துவமனை: டேக்சி சாரதிகளின் துணிச்சல் முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்தாததால், இறந்த குழந்தையின் உடலைத் தர மறுத்த சம்பவத்தில் வாடகை டேக்சி சாரதிகள் அந்த மருத்துவமனையை முற்றுகையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் அதிரடியாக மருத்துவமனைக்கு உள்ளே புகுந்த சாரதிகள் அந்தக் குழந்தையின் உடலை மீட்டு எடுத்து வந்துள்ளனர்.

இந்தோனேஷிய நகரமான படாங்கில் அமைந்துள்ளது ஜமீல் மருத்துவமனை. கடந்த செவ்வாயன்று, Alif Putr என்ற ஆறு மாத குழந்தையின் sஅடலத்தை கட்டணம் செலுத்தாததால் பெற்றோரிடம் வழங்க மறுத்துவிட்டது.

இஸ்லாமிய வழக்கப்படி இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.

குழந்தையின் உறவினர் ஒருவர் வாடகை இரு சக்கர சாரதி என்பதாலும், மனிதாபிமான அடிப்படையிலும் குழந்தையின் உடலை மீட்க சாரதிகள் கூட்டம் அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டது.

தொடர்ந்து குழந்தை ஆலிஃபின் சடலத்தை மீட்டுவந்த சாரதிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறும் காட்சி காணொளியாக வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சாரதி ஒருவர், அந்தக் குழந்தையின் குடும்பம் கட்டணத் தொகையான 1774 டொலர்( உள்ளூர் தொகையில் 25 மில்லியன் ருப்யா) செலுத்தாமல் முடியாமல் இருந்ததால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவமனை மீது ஏற்கெனவே அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தோனேஷிய ஜனாதிபதியின் பெயரில் செயல்படும் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது.

ஆனால் நிதி பிரச்சனையால் இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை ஆலிஃப் உடல் நலம் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குறித்த திட்டத்தில் சேர முடிவு செய்ததாக கூறும் அதன் தாயார்,

ஆனால் கடந்த செவ்வாய் அன்று காலை அறுவை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதனால் ஆலிஃப் இறுதி சடங்கிற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவரது தாயார் டேவி சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்