அதீத வெப்பம்..! காருக்குள் சிக்கி துடி துடித்து இறந்த குழந்தைகள்: மீளா துயரத்தில் பெற்ற தாய்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவில் காருக்குள் விடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் அதீத வெப்பம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிஸ்பேன் தெற்கே உள்ள லோகன் நகரில் உள்ள வீட்டிலே இக்கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், 1 மற்றும் 2 வயதுடைய சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

லோகன் நகரின் இன்று வெப்பம் 31 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்நிலையில், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் விடப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ந்து போன தாய், இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்குள் தூக்கிச் சென்று தண்ணீர் தெளித்து உள்ளார். இருவரும் மூச்சு பேச்சு இல்லாததால் உடனே மருத்துவ குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவ உதவி குழுவினர், குழந்தைகளை காப்பாற்ற போராடியும் எந்த பலனும் அளிக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தை உறுதி செய்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி கூறியதாவது, இரண்டு குழந்தைகளும் அதீத வெப்பம் காரணமாக உயிரிழந்து ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்