விமான நிலையத்தில் மறைந்திருந்த கொடிய விஷ நாகம்... ஊழியர் கண்ட காட்சி! பகீர் கிளப்பும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் விமானநிலையத்தில் கழிவு நீர் செல்லும் வடிகாலில் கொடிய விஷம் கொண்ட பாம்பு பதுங்கியிருந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் La Mercy-யில் இருக்கும் கிங் சகா சர்வதேச விமானநிலையத்தின் கழிவு நீர் வடிகாலில் கொடிய விஷம் கொண்ட பாம்பு இருப்பதை விமானநிலைய ஊழியர்கள் கவனித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இது குறித்து உடனடியாக அங்கு விரைந்து வந்த பாம்பு பிடிக்கும் நபர் Nick Evans, வடிகால் அடியில் பதுங்கியிருந்த பாம்பை பிடிப்பதற்கு தயாரானார்.

அவர் பாம்பு பிடிக்கும் காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை Nick Evans தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில் வடிகால் கீழே மறைந்திருந்த பாம்பை, Nick Evans தான் கையில் வைத்திருக்கும் டார்ச் விளக்கால் அதன் மீது அடிக்கிறார்.

இதனால் பாம்பு நகர்ந்து வந்த போது பாம்பை பிடிக்க பயன்படுத்தப்படும், கம்பியால், அதன் தலையை பிடித்து, அதன் பின் தன்னுடைய கையால் பாம்பின் தலை பிடித்து வெளியில் எடுக்கிறார்.

இந்த பாம்பு கொடிய விஷம் கொண்டது எனவும், இது venomous வகையை சேர்ந்தது என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்