நடுரோட்டில் அழுதுகொண்டிருந்த வீடற்ற முதியவர்: நெஞ்சை உருக்கும் படத்தின் பின்னணி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகனில் வீடற்ற ஒரு நபர் நடுரோட்டில் இறந்த தன்னுடைய நாய்க்குட்டியை பார்த்து கதறி அழும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெக்சிகோவில் கேமலினாஸ் டி மோரேலியா அவென்யூ பகுதியில் வீடற்றவராக வசித்து வரும் ரவுல் என்ற நபர், நீண்ட நாட்களாக தன்னுடன் சோலோவினோ என்கிற ஒரு குட்டி நாயை வளர்த்து வந்தார்.

பார்க்கிங் இடங்களைக் கண்டுபிடிக்க உதவியதற்காக உள்ளூர்வாசிகளிடையே ரவுல், நல்ல பிரபலமடைந்தவராக இருந்து வந்தார்.

இவரது நாய் சோலோவினோ திங்கட்கிழமையன்று இரவு நடுரோட்டில் கார் விபத்தில் சிக்கி இறந்தது. அதன் அருகே அமர்ந்தபடியே ரவுல் நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளார்.

ஆரம்பத்தில் அந்த வழியாக சென்ற ஒருவர் உதவ முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ரவுல், சிறிது நேரம் கழித்து சில பெண்களுடன் சேர்ந்த வளர்ப்பு பிராணியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.

இதுகுறித்து உள்ளூர் உணவகம் ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில், 'ரவுலின் விசுவாசமான நண்பரின் இழப்புக்கு வருத்தப்படுகிறோம். ஏனெனில் அவருக்கு கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், மிகவும் கனிவான மற்றும் கடின உழைப்பாளியாக திகழ்ந்து வந்தார். அவர் உணவகத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ள கார்களை கவனித்துக்கொள்ள எங்களுக்கு உதவினார்.

'இன்று நாங்கள் உணவகத்தின் விளம்பரத்தைப் பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஆனால் உங்கள் ஆதரவைக் கேட்கிறோம். யாராவது உணவு அல்லது உடைகளுக்கு உதவ விரும்பினால், அவரது முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை வைக்க நீங்கள் என்ன செய்தாலும், டான் ரவுலுக்கு உதவ விரும்பும் எவருக்கும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எங்கள் இடம் திறந்திருக்கும்' என பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்