சிறுமியின் கண்ணில் இருந்து அடுக்கடுக்காக வந்த பேப்பர் துண்டுகள்: அதிர்ச்சியடைந்த தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த 7 வயது சிறுமியின் கண்களில் இருந்து 12க்கும் அதிகமான பேப்பர் துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த டியூயோ டியோ என்கிற 7 வயது சிறுமி, கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் தன்னுடைய சக வகுப்பு தோழர்கள் இருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

அப்போது ஒரு மாணவன் சிறிய பேப்பர் துண்டுகளை மாணவியின் கண்களுக்குள் சொருகி சித்ரவதை செய்துள்ளான்.

செப்டம்பர் 28 அன்று சிறுமியின் கண்களில் இருந்து பேப்பர் துண்டுகள் வெளிவருவதை பார்த்த அவருடைய தாய், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், கண்களில் இருந்து சிறிது சிறிதாக பேப்பர் துண்டுகளை வெளியில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழும் வீடியோ காட்சியினை பெற்றோர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோவை காண...

இந்த காகிதம் டியோ டியோவின் பார்வைக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே தனது மிகப்பெரிய கவலை என சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

கண்ணில் இன்னும் அதிகமான காகிதத் துண்டுகள் சிக்கியுள்ளதாகவும் அவள் கவலை தெரிவித்துள்ளார். காகிதங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதா என்பதை மருத்துவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது ஆசிரியர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை தலைமையாசிரியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers