சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பாத நபர்...! சிறைத்தண்டனைக்காக நிகழ்த்திய கொடூரம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால், இந்தியரை கொலை செய்த பாகிஸ்தானியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

துபாய் பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷீடியாவில் ஒரு கட்டுமான இடத்தில் தொழிலாளர்கள் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு இந்தியரை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, பாகிஸ்தானை சேர்ந்த 27 வயதான பிரதிவாதி நிர்வாணமாக இருப்பதை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அவருடைய சகோதரனுக்கு அனுப்பியுள்ளார்.

அதனை பார்த்து ஆத்திரமடைந்த அந்த சகோதரன் உடனே நாட்டிற்கு திரும்புமாறு கூறியுள்ளார். அவமானம் தாங்க முடியாத பாகிஸ்தானியர், நாட்டிற்கு திரும்புவதை விட சிறைக்கு செல்வதே மேல் என முடிவு செய்துள்ளார்.

இதற்காக அருகாமையில் உறங்கிக்கொண்டிருந்த வயதான இந்தியரை கொலை செய்ய முடிவெடுத்து, துணியால் அவருடைய கழுத்தை நெரித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் இருவர், பாகிஸ்தானியரை தடுக்க முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாகிஸ்தானியர் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் சிறைவாசம் முடிந்த பின்னர் அவரை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்