20 ஆண்டுகளாக மூக்கின் உள்ளே இருந்தது என்ன? X-ray-வில் இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கடந்த சில மாதங்களாக மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்த இளைஞர் மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அவரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவின் வடக்கு பகுதியின் Harbin நகரத்தை சேர்ந்தவர் Zhang Binsheng(30). இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக மூக்கில் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனால் மூச்சு விடுதில் சிரமம், அதுமட்டுமின்றி சில நேரங்களில் வாசனைகளை கூட அவரால் சரியாக வாசனை செய்ய முடியாததால், மூக்கில் ஏதோ அடைத்து வைத்தது போன்று இருந்துள்ளது.

இதையடுத்து அவர் அங்கிருக்கும் Harbin Medical University Fourth Affiliated மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அவரின் மூக்கின் உள்ளே, ஏதோ மனித பல் போன்று இருப்பதை கண்டுள்ளனர்.

இதனால் இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் தீர்வு என்பதால், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 30 மணி நேரம் நடந்த சிகிச்சையில், அவரின் மூக்கில் இருந்து மருத்துவர்கள் நினைத்தது போன்றே பல்லை வெளியில் எடுத்துள்ளனர்.

இதைக் கண்ட அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் தற்போது நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து அதற்கான சிகிச்சை இருப்பதால் தற்போது வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த நபர் தன்னுடைய 10 வயதில்(1999-ஆம் ஆண்டு) மால் ஒன்றின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 65 தையல்கள் போடப்பட்டது. அப்போது வாயின் உள்ளே இருந்த இரண்டு பற்கள் காணமல் போக, அதில் ஒரு பல்லை மட்டும் கண்டுபிடித்துள்ளனர். மற்றொரு பல்லை கண்டுகொள்ளாமல் சாதரணமாக பெற்றோர் விட்டுள்ளனர்.

அதன் விளைவே இப்போது Zhang Binsheng மூக்கில் இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இது சீன ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்