உலகில் டாப் 5 சிறந்த விமான நிறுவனம் இது தான்...யார் முதலிடத்தில் தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் சிறந்த விமான நிலையம் குறித்து விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் அனுபவத்தை வைத்து கேட்டு, நடத்தப்பட்ட ஆய்வில் ஏர் நியூசிலாந்து நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

பிரித்தானியாவை மையாம கொண்ட விச் டிராவல் என்ற நிறுவனம் சமீபத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சுமார் 8,000 பயணிகளிடம் நீங்கள் பயணம் செய்த விமானங்களில், எந்த விமான சுத்தமாக, உங்களுக்கு திருப்திகரமாக இருந்தது என்று ஆய்வு நடத்தியுள்ளது.

அதில் 100-க்கு 97 சதவீதம் பேர் Air New Zealand நிறுவனம் மிகவும் சுத்தமாக வைத்து கொள்வதாகவும் ,அதற்கு அடுத்தபடியாக 96 சதவீதத்துடன் Singapore Airline நிறுவனமும், மூன்றாவது இடத்தில் Emirates நிறுவனம் 95 சதவீதத்துடனும், நான்காவது இடத்தில் Cathay Pacific நிறுவனம் மற்றும் Swiss நிறுவனம் 94 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

இதில் ஈசி ஜெட் நிறுவனத்தில் பயணம் செய்த பயணிகள் மூன்றில் இரண்டு பேர், மிகவும் சுத்தமாக இருப்பதாகவும், British Airways-க்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த நான்கில் மூன்று பேர் சுத்தமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதில் சுத்தமில்லாத விமானநிறுவனம் என்றால், அது ரியான்மர் நிறுவனம் தான் எனவும் அதில் பாதி பேர் அதில் சுத்தமே இல்லை எனவும் சிலர் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers