33 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியருக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாயில் 35 ஆண்டுகள் தங்கி தொழில் செய்து வந்து கடனால் தத்தளித்து வரும் இந்திய நபருக்கும் தற்போது 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் Kamalasanan Nadar Vasu(56). இவர் சமீபத்தில் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற போது, அங்கிருந்த விமானநிலையத்தில் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 22-ஆம் திகதி Dubai Duty Free குலுக்கல் நடந்துள்ளது. இதில் Kamalasanan Nadar Vasu வாங்கியிருந்த டிக்கெட் நம்பர் 3318 என்ற எண்ணிற்கு 314 சீரிஸ் அடிப்படையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்(இந்திய மதிப்பில் 7,09,17,500 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து Kamalasanan Nadar Vasu அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த டிக்கெட் நான் வாங்குவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நண்பர் தான், கண்டிப்பாக இதில் விழுந்த பரிசை நான் அவரிடம் பகிர்ந்து கொள்வேன்.

நான் துபாய்க்கு வந்து 35 வருடங்கள் ஆகிறது. steel fabrication தொழில் செய்து வருகிறேன். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தொழிலில் அந்தளவிற்கு முன்னேற்றம் இல்லை.

இதன் காரணமாக எனக்கு அதிக கடன் இருக்கிறது. அதை எப்படி அடைக்க போகிறேன் என்று தவித்து கொண்டிருந்தேன். இப்போது இதை அறிந்தவுடன் நான் உண்மையிலே அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன். இதை வைத்து என்னுடைய கடனை அடைத்துவிட்டு, அதன் பின் என்னுடைய வருங்கால தொழில் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

செப்டம்பர் மாதம் தான் என்னுடைய வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எனக்கு ராசியமான மாதமும் செப்டம்பர் மாதம் என்று கூறுவேன். நான் இப்போது வென்றிருக்கும் இந்த லொட்டரி டிக்கெட் செப்டம்பர் மாதம் வாங்கியது, நான் என்னுடைய தொழிலை கடந்த 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் துவங்கினேன்.

1994-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. நான் கடந்த 1986-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன். நான் என்னுடைய இன்ஜினியரிங் டிகிரி முடித்தது செப்டம்பர் மாதம், இதனால் என் வாழ்க்கையில் செப்டம்பர் மாதம் மறக்க முடியாத மாதம் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்