நியூசிலாந்தில் புதிய மாநாடு கட்டிடத்தில் பிடித்த தீ.. கரும் புகைமூட்டத்தினால் தீயணைப்புபடையினர் போராட்டம்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையம், 2வது நாளாக தீப்பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தின் ஸ்கை சிட்டி டவர் அருகே, கசினோ வளாகத்தில் மிகப்பெரிய மாநாடு மையம் கட்டப்பட்டு வந்தது.

இந்த கட்டிட பணி முடிந்ததும், 2021ஆம் ஆண்டு ஆசியா-பசிபிக் வணிக ஒத்துழைப்பு மாநாடு (APEC) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஊழியர்கள் பலர் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

NIWA WEATHER

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரமாக தீயை அணைக்க போராடினர்.

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் தீயை அணைக்க முடியவில்லை. தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது. எனினும், தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் துரிதகதியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறுகையில், ‘மையக்கட்டிடம் பணி முடியாவிட்டாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் தீயணைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

REUTERS

Steven Ivamy

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்