திருமண ஆசையில் உயிரிழந்த காதலி... சடலத்தை மணமுடித்த காதலன்..! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் ஒரு காதலன் இறந்த தனது காதலியின் சடலத்தை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த 35 வயதான சூ ஷினன் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு இணையதளத்தின் வாயிலாக யாங் லியு என்பவரை சந்தித்துள்ளார்.

நண்பர்களாக பழக ஆரம்பித்த சில நாட்களிலே அவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்கள் திருமணத்தை ஆகஸ்ட், 2013 இல் பதிவு செய்து, திருமணத்திற்குத் தயாராகத் தொடங்கினர்.

ஆனால் மூன்று மாதங்கள் கழித்து மார்பு பகுதியில் வலி இருப்பதாக யாங் கூறியுள்ளார். உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அன்றிலிருந்து அவர்களுடைய வாழ்க்கையும் தலைகீழாக மாறியுள்ளது.

அதன்பிறகு யாங் அறுவை சிகிச்சை மற்றும் பல சுற்று கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்று வந்தார். அதன்விளைவாக 2017 ஆம் ஆண்டில், யாங்கின் நிலைமை மேம்பட்டது மற்றும் தம்பதியினர் ஒரு பிளாட்டுக்கான பணத்தை மிச்சப்படுத்தவும், மீண்டும் தங்கள் திருமணத்திற்கு தயாராகவும் தொடங்கினர்.

துரதிஷ்டவசமாக அடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளது. சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட சூ, யாங்கை அழைத்துச் சென்றார்.

ஆனால் எந்த பலனும் கிடைக்காமல் ஐந்தரை ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி யாங், அக்டோபர் 14 ஆம் திகதி தனது 34 வயதில் இறந்தார்.

யாங் இறந்ததில் இருந்து தொடர்ந்து 7 நாட்களாக சூ அவருடைய சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். மேலும் மணப்பெண்ணாக வேண்டும் என்கிற தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமையன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

யாங்கிற்கு வெள்ளை திருமண உடை அணிவித்து 169 இளஞ்சிவப்பு பூக்களை சுற்றிலும் வைத்து திருமணம் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறது அவருடைய உடல் இறுதி சடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் இணையத்தில் தம்பதியினரின் கதையை கேட்டு, சூவின் அர்ப்பணிப்பைப் ஆயிரக்கணக்கான மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்