சொந்த சகோதரனையே வெட்டி வீசிய பெண்: போதை கும்பல்களின் உண்மை முகத்தை காட்டும் ஒரு செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

போதைப்பொருள் பயன்படுத்தும் ஒரு பிரித்தானிய இளம்பெண், போதைப்பொருட்களை விற்கும் கும்பலிலுள்ள ஒரு பெண்ணை சந்திக்க கொலம்பியாவுக்கு சென்றார்.

Chanel (25) என்னும் அந்த இளம்பெண், பொழுதுபோக்குக்காக கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை பயன்படுத்துபவர்.

ஆனால் போதைப்பொருட்கள் எப்படி கிடைக்கின்றன, போதைப்பொருட்களுக்காக சில நாடுகளில் எத்தனை பேர் கொலை செய்யப்படுகிறார்கள், எத்தனை இளம்பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதை, காரணமே இல்லாமல், வெறும் பொழுதுபோக்குக்காக போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.

அதன்படி பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் சிலர், போதைப்பொருள் தயாரிக்கும், விற்கும் கும்பல்கள் அதிகம் உள்ள கொலம்பியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் அங்கு போதைப்பொருள் கும்பலிலுள்ள சிலரை சந்தித்தனர்.

அப்படி Chanel என்ற பெண் ஒரு கொலைகாரியை சந்தித்தார்.

15 வயது முதல் கொலை செய்து வருவதாக கூறும் அந்த பெண், இதுவரை பலரை கொலை செய்துள்ளதாக சர்வசாதாரணமாக தெரிவிக்க, அதிர்ச்சியடைந்தார் Chanel.

Chanel

கடைசியாக எப்போது கொலை செய்தீர்கள் என்று Chanel அந்த பெண்ணிடம் கேட்க, எட்டு நாட்களுக்கு முன் ஒரு ஆணை கொலை செய்ததாக தெரிவித்த அந்த பெண், இன்னொருவரைக் கொலை செய்ய மறுத்ததற்காக ஒருவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டதாக தெரிவித்தார்.

Chanel மட்டுமல்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்தவர்களும், என்ன கொலை செய்ய மறுத்ததற்காக இந்த பெண் ஒருவரை கொலை செய்தாரா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முகமூடியும் கண்ணாடியும் அணிந்து முகத்தை மறைத்தவாறு பேட்டியளித்த அந்த பெண், 15 வயதிலிருந்து தான் கொலை செய்து வருவதாகவும், பணத்திற்கு கொலை செய்ய தனக்கு பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதோடு, தான் கர்ப்பிணிப்பெண்களை கூட கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் உறவினர்கள் யாரையாவது கொலை செய்துள்ளீர்களா என்று அவரிடம் Chanel கேட்க, ஆம், எனது சகோதரர் உறவு முறையுள்ள ஒருவரை கொலை செய்துள்ளேன், நான் அவரை கொலை செய்யாமலிருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார், இந்த தொழில் அப்படிப்பட்டது, உயிரோடிருக்கும் வரை தொழில் செய்வோம், என்று நம்மைக் கொல்கிறார்களோ அன்றுடன் எல்லாம் முடிந்தது என்கிறார்.

மிக எளிதாக குடும்ப உறவுகளை புறந்தள்ளி, பெற்றோரின் ஆலோசனைகளை மதிக்காமல், கையில் கொஞ்சம் பணம் வந்ததும் போதையை நாடி ஓடும் இளைஞர்கள், தாங்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்காக எத்தனை பேர் அனுதினமும் கொலை செய்யப்படுகிறார்கள்.

எத்தனை பேர் இத்தகைய கும்பல்களுக்குள் சிக்கி கொலைகாரர்களாகிறார்கள், அந்த சமுதாயத்தில் எத்தனை பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள், இப்படி இத்தனை பேரின் இரத்தத்தில் உருவான ஒரு போதைப்பொருள் தனக்கு தேவையா என்று எண்ணினாலே, நிச்சயம் இந்த குற்றங்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்புள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்