எட்டு வாளிகளில் உடல் உறுப்புகள்: 20 இளம்பெண்களை கொன்று நாய்களுக்கு உணவாக்கிய கொடூர தம்பதி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 20 இளம்பெண்களைக் கொலை செய்து அவர்களின் இதயங்களை தங்கள் நாய்களுக்கு உணவாக்கிய தம்பதிக்கு 654 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Juan Carlos Hernandez Bejar (38) அவரது மனைவி Patricia Martinez Bernal (44) இருவரும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் தள்ளுவண்டி ஒன்றில் மனித உடல் உறுப்புகளை வைத்து தள்ளிச் செல்லும்போது பிடிபட்டனர். அவர்களது வீட்டை சோதனையிட்ட பொலிசார் அங்கு ஏராளமான பெண்களின் உடல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அத்துடன் 20 லிற்றர் கொள்ளளவு கொண்ட எட்டு வாளிகள் நிறைய உடல் உறுப்புகள் புதைக்கப்பட்டிருந்ததையும் கண்டு பிடித்தனர்.

(Image: CEN)

அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் குளிர்பதன பெட்டி ஒன்றிற்குள் பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிந்து மேலும் சில உடல் பாகங்களும் கிடைத்தன.

முன்பு தான் 20 பெண்களை கொலை செய்ததை Hernandez ஒப்புக்கொண்டிருந்தார். உடைகள் மற்றும் வாசனை திரவியங்கள் விற்பதாகக்கூறி Patricia இளம்பெண்களை தங்கள் வீட்டுக்கு வரவழைப்பதுண்டு என்றும், அவர்கள் வந்ததும் Hernandez அவர்களை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டுவதுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

தான் கொலை செய்த பெண்களில் குறைந்தது ஒரு பெண்ணையாவது வன்புணர்வு செய்ததாகவும் Hernandez ஒப்புக்கொண்டார்.

மே மாதம் 20ஆம் திகதி முதல், எட்டு முறை அந்த கொடூர தம்பதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவருக்கும் மன நல பிரச்னைகள் இருப்பதாக மன நல மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

(Image: CEN)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers