உயிர் பிரியும் வலி... இளம் பெண்ணின் கண்களில் இருந்து உதிரும் படிக கற்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆர்மேனியா நாட்டில் இளம் பெண் ஒருவரின் கண்களில் இருந்து படிக கற்கள் உதிரும் சம்பவம் அங்குள்ள மருத்துவர்கள் அனைவரையும் ஒன்றாக திணறடித்துள்ளது.

ஆர்மேனியாவின் Spandaryan என்ற கிராமத்தில் குடியிருந்து வருபவர் 22 வயதான Satenik Kazaryan.

இவருக்கு திடீரென்று கண்களில் இருந்து படிக கற்கள் உதிரத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு இது 50 முறையாவது உதிரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமது வாழ்க்கை நரக வலியுடன் நகர்கிறது என கூறும் அவர், மருத்துவர்கள் பலரிடம் சென்றும் எந்த பலனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கண் மருத்துவர் ஒருவரை அணுகிய போது அவர், தமது கண்களில் இருந்து சில படிக கற்களை வெளியே எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

முதலில் மருத்துவ சிகிச்சை பலனளித்ததாக கூறும் அவர், அதன் பின்னர் மருத்துவர்களால் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் குழம்பியதாக தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் கண்களில் இருந்து படிக கற்கள் உதிர்வதை பார்த்து, அவர் கண்களில் கண்ணாடி துகள்கள் சிக்கியிருக்கலாம் என கருதியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்கு நாள் கண்களில் வலி அதிகரிப்பதாக கூறிய பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், மருத்துவர்கள் இந்த நோயை நம்ப மறுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பலாம் என்றால், அன்றாட உணவுக்காக உழைக்கும் வர்க்கம் நாங்கள் எனவும், பொருளாதார நிலை அதற்கு இடம் தராது எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஆர்மேனிய அரசு, இவரது விசித்திர நோய் தொடர்பில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்