பாதுகாப்பான இடத்தில் 10 நாட்கள்... 13 வயது சிறுமிக்கு 4 சிறுவர்களால் நடந்த கொடூரம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இஸ்ரயேலில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான இடத்தை வைத்து, 12 வயது சிறுமி பத்து நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேயலின் அண்டை நாடான ஹமாஸ் போராளிகள் அடிக்கடி ராக்கெட் தாக்குதல் நடத்தி வருவதால் அதிலிருந்து தப்புவதற்காக அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் பதுங்கி கொள்வார்கள்.

அத்தகைய பாதுகாப்பான இடத்தில் 13 வயது சிறுமி பத்து நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காசாவுக்கு அருகிலுள்ள தெற்கு நகரமான நெட்டிவோட்டில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த 13 வயது சிறுமி கொடுத்த புகாரில், ஒரு நாளைக்கு இரண்டு முறை என 16 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமியை தங்குமிடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு கை, கால்களை கட்டிப்போட்டு 10 நாட்களாக துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

அதனை வீடியோவாக எடுத்துக்கொண்ட சிறுவர்கள், சம்பவம் பற்றி யாரிடமாவது பேசினால் அவரது தம்பியை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அந்த அறையை விட்டு வெளியேற முடியாமல் உள்ளே அழுது கொண்டிருந்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக 4 சிறுவர்களை கைது செய்தனர். போதிய ஆதாரமில்லை என நீதிமன்றம் கூறியதை அடுத்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமையன்று அவர்களை விடுவித்தனர்.

ஆனால் ஒரு சிறுவனை மட்டும் இன்னும் பொலிஸார் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் இதுவரை சிறுவர்கள் எடுத்த வீடியோவை பொலிஸாரால் கைப்பற்ற முடியவில்லை.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது நேகேவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்