உண்மையிலேயே.. சவுதி மீது டிரோன்களை ஏவியது இவர்கள் தான்... வெளிப்படையாக சொன்ன பிரித்தானிய பிரதமர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சவுதி எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என பிரத்தானியா நம்புவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுடன் ஆலோசித்து கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14ம் திகதி சவுதி அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி குழு பொறுப்பேற்றது. எனினும், இத்தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என சவுதி மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானய பிரதமர் போரிஸ் ஜான்சன், உண்மையிலேயே ஈரான் தான் சவுதி தாக்குதலுக்கு காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் பதட்டங்களை குறைக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என கூறினார்.

ராணுவ நடவடிக்கையை பிரித்தானியா நிராகரிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜான்சன், சவுதி அரேபியாவைப் பாதுகாக்க உதவுவதற்காக அமெரிக்காவின் பரிந்துரையை உன்னிப்பாக கவனிப்பதாகக் கூறினார்.

மேலும், சவுதி அல்லது அமெரிக்காவோ எங்கள் உதவியை கேட்டால், நாங்கள் எந்த வகையில் உதவியாக இருக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்வோம் என்று ஜான்சன் கூறினார்.

ஐ.நா. கூட்டத்தில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியுடன் பிராந்தியத்தில் ஈரானின் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாக ஜான்சன் கூறினார், அத்துடன் சட்டவிரோதமாகவும் நியாயமற்றதாகவும் சிறைபிடிக்கப்பட்டுள்ள பல இரட்டை தேசிய ஈரானியர்களை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்