5000 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய டேங்கர்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இராணுவ பயிற்சியின் போது பாராசூட்டுகள் திறக்கத் தவறியதால் 5000 அடி உயரத்திலிருந்து இரண்டு ரஷ்ய டேங்கர்கள் தரையில் விழுந்து முற்றிலுமாக நொறுங்கியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற இராணுவ பயிற்சியின் போது, சோவியத் காலத்து வான்வழி காலாட்படை சண்டை யில் பயன்படுத்தப்பட்ட பி.எம்.டி -2 என்கிற டேங்கர், ஐ.எல் -76 எம்.டி விமானத்தின் பின்புறத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஏழு டன் எடையுள்ள முதல் டேங்கர் 5000 அடி உயரத்திலிருந்து நேரடியாக தரையில் விழுந்து முற்றிலும் நொறுங்கியது. அதனை தொடர்ந்து இறக்கப்பட்ட இரண்டாவது டேங்கரின் பாராசூட் திறக்க தவறியதால் அதுவும் சிதைந்துள்ளது.

இதனை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது இராணு வீரர்கள் யாரும் வாகனத்தின் உள்ளே இல்லை. தரையிலும் யாரும் காயமடையவில்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்.

ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளை உள்ளடக்கிய Tsentr-2019 சர்வதேச ஆயுதப்படை பயிற்சிகளின் போது இந்த சங்கடமான தவறு ஏற்பட்டுள்ளது.

விளாடிமிர் புதின் பயிற்சிகளை மேற்பார்வையிட்ட அதே நாளில் தான் விபத்து நடந்ததா என்பது தெளிவாக இல்லை. இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்