சாலையை கடக்கும் போது கார் மோதி தூக்கி எறியப்பட்ட சிறுவன்... அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் கார் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்படும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள சாலைப்பகுதியில் ஒரு சிறுவன் ஊதா நிறத்திலான காரை மட்டும் கவனித்து வேகமாக கடக்க முயற்சிக்கிறான்.

ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வந்த வெள்ளை நிறத்திலான கார், வேகமாக சிறுவன் மீது மோதி தூக்கி எறிந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த கார் உரிமையாளர் நிறுத்திவிட்டு, அந்த சிறுவனுக்கு காயம் ஏதேனும் பட்டிருக்கிறதா என கேட்டறிந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நொடியிலேயே, சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலரும் ஓடிவந்து நலம் விசாரித்தனர்.

இந்த வீடியோவை தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நபர், பெற்றோர் அனைவருமே தங்களுடைய குழந்தைகளை கவனத்துடன் சாலைகளை கவனிக்க சொல்லிக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...