தரையை சுத்தம் செய்யும் துணியால் மாணவிகளின் முகத்தை துடைத்த ஆசிரியர்: ஒரு சர்ச்சை வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவிகள் அதிக அளவு மேக் அப் போட்டிருந்ததையடுத்து, ஆசிரியர் ஒருவர் தரை துடைக்கும் துணியால் அவர்களது முகத்தை சுத்தம் செய்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள உண்டு உறைவிட பள்ளி ஒன்றிற்கு விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவிகள் அதிக அளவு மேக் அப் போட்டிருந்ததைக் கண்ட ஆசிரியர் ஒருவர், அவர்களை தடுத்து நிறுத்தி, பக்கெட் ஒன்றில் தண்ணீர் வைத்து ஒரு துண்டு அழுக்குத் துணியால் அவர்கள் போட்டிருந்த மேக் அப்பை துடைத்தார். அவரது சக ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

அந்த மாணவிகளில் பெரும்பாலானோர் ஏழை மாணவிகள். அவர்களது பெற்றோர் வேலை நிமித்தமாக பிள்ளைகளை விட்டு விட்டு தூர இடங்களிலுள்ள நகரங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

எனவே அவர்களை முறையாக கண்டித்து வளர்க்க யாரும் இல்லாததால்தான் அவர்கள் இப்படி வளர்கிறார்கள் என்று கண்டித்துள்ளார் அந்த ஆசிரியர்.

சிலர் அவர் செய்தது சரிதான் என்றாலும், செய்த விதம் சரியில்லை என்று விமர்சித்திருந்தாலும், பெரும்பாலான பெற்றோர் அவர் செய்தது சரிதான், படிக்கிற பிள்ளைகளுக்கு என்ன மேக் அப் வேண்டிக் கிடக்கிறது என்று அந்த ஆசிரியருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.

அந்த ஆசிரியர் செய்த விதம் சரியற்றதுதான் என்று கூறியுள்ள பள்ளியின் செய்தி தொடர்பாளர், ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்