சத்தமில்லாமல் நகர்ந்த மலைப்பாம்பு, கடைசி நேரத்தில் எஸ்கேப்பான மறிமான்: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க தேசிய பூங்கா ஒன்றில், மறிமான் ஒன்றை உண்ண சத்தமில்லாமல் நகரும் மலைப்பாம்பு ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது.

Katinka Steyn (53) என்பவர் எடுத்த அந்த வீடியோவில், மரத்திலிருக்கும் மலைப்பாம்பு ஒன்று இரை கிடைத்த மகிழ்ச்சியில் மரத்திலிருந்து மெதுவாக இறங்குவதைக் காணலாம்.

மறிமான் (antelope) ஒன்று இரை மேய்ந்து கொண்டிருக்க, மரத்தின் மீதிருந்த மலைப்பாம்பின் கண்களில் அது சிக்குகிறது.

அமைதியாக மரத்திலிருந்து இறங்கும் அந்த மலைப்பாம்பு, மெதுவாக தன்னை கவனிக்காமல் புல் மேய்ந்துகொண்டிருக்கும் அந்த மறிமானை நெருங்குகிறது.

விருந்து கிடைத்தது என அந்த மறிமானை தாக்க அது முயலும் அந்த கணத்தில், சட்டென நிமிர்ந்து பார்க்கிறது அந்த மறிமான்.

அந்த மலைப்பாம்பை உற்றுப் பார்த்துவிட்டு அங்கிருந்து அது நகர, மீண்டும் திரும்பி தான் இருந்த மரத்துக்கே ஏமாற்றத்துடன் திரும்புகிறது அந்த மலைப்பாம்பு.

இந்த வீடியோ சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட, சில மணி நேரத்திற்குள்ளாகவே அதை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டுவிட்டார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்