28 அடி நீள ராட்சத மலைப்பாம்புடன் உயிருக்கு போராடிய 6 அடி முதலை... கமெராவில் சிக்கிய பகீர் காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் 28 அடி ராட்சத மலைப்பாம்பு 6 அடி முதலையை தண்ணீருனுள் வைத்து இறுக்கி கொன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் Albuquerque பகுதியைச் சேர்ந்தவர் Kevin Dooley(58). வனவிலங்கு புகைப்பட கலைஞரான இவர் சமீபத்தில் பிரேசிலின் Pantanal பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது புகைப்படம் எடுப்பதாக படகில் இவர் அமர்ந்திருந்த போது, திடீரென்று இவரிடமிருந்து சற்று தொலைவில், சுமார் 28 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு, முதலையுடன் தண்ணீரின் உள்ளே சண்டை போடுவதைக் கண்டுள்ளார்.

இதனால் இதை உடனடியாக புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார். இதில் பாம்பின் தலை முதலையின் வாய் பகுதியில் இருந்துள்ளது. பாம்பிடமிருந்து தப்பிப்பதற்காக முதலை போராடிய போது, பாம்பு தன்னுடைய உடல்களை வைத்து முதலையின் உடலை இறுக்கியுள்ளது.

அதன் கால்கள் நொறுங்கியுள்ளன. அதனால் நகரவே முடியவில்லை, இதனால் முதலை இறந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன், அதே போன்று பாம்பின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...