மின்னல் வேகத்தில் சுவர் ஏறும் வீரர்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

போலந்து நாட்டில் Climbing எனும் சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், நபர் ஒருவர் மின் தூக்கிக்கு இணையான வேகத்தில் சுவரில் ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Climbing எனும் வேகமாக சுவர் ஏறும் போட்டி, ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடரில் அறிமுகமாக உள்ளது.

இந்நிலையில், போலந்தின் வார்ஷா நகரில் மின் தூக்கிக்கு (Lift) இணையாக சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Marcin Dzienski(26) என்ற இளைஞர், 23 மீற்றர் உயரத்தை 12.12 விநாடிகளில் ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மனிதனுக்கும், இயந்திரத்திற்குமான இந்த போட்டி 6 தளங்களில் யார் முதலில் செல்வது என்ற பெயரில் இந்த சாகசம் நடத்தப்பட்டது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுவரில் Marcin மின்னல் வேகத்தில் ஏறி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தனது தாத்தாவின் பழத்தோட்டத்தில் ஆப்பிள் மரங்களை அளக்கும் இளைஞராக Marcin தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து Climbing விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் தரவரிசை வேகம், போல்டரிங் மற்றும் முன்னிலை Climbing ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த மதிப்பெண் வழங்கப்படும்.

இதற்கிடையில் Marcin Dzienski மின்னல் வேகத்தில் சுவர் ஏறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்