தாயின் கையிலிருந்து பறித்துச் செல்லப்பட்ட சிறுமி: கடத்தியவர் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க பவர் போட் சேம்பியனான Wynand de Jager என்பவரின் மகள் Amy-Lee de Jager (6) திங்களன்று காலை 7.40 மணியளவில் தனது தாயுடன் பள்ளிக்குச் செல்லும்போது, அவரது தாயின் கையிருந்து குழந்தையைப் பறித்துச் சென்றது ஒரு கூட்டம்.

ஒரு கையில் மகன் Jayden, மறு கையில் மகள் என தடுமாறி நின்ற Angeline, மகளை மீட்க போராடியதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பொலிசார் உடனடியாக Amy-Leeயின் படத்தை வெளியிட்டு, காணவில்லை என இணையம் உட்பட Johannesburg நகர் முழுவதும் விளம்பரம் செய்தனர்.

இதற்கிடையில் Wynand குடும்பத்தினரேதான் அந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவ, தனது குடும்பத்துக்கும் இந்த கடத்தல் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்தார் அவர்.

இந்நிலையில் செவ்வாயன்று காலை ஒரு குழந்தை தனியாக தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒரு தம்பதியினர், அவள் Amy-Lee என்பதை அறிந்து உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

19 மணி நேரங்கள் குழந்தையை பிரிந்து தவித்த குடும்பமும் Amy-Leeயும் மீண்டும் ஒன்று சேர்ந்த நிலையில், இரவு நன்கு தூங்கி ஓய்வெடுத்தபின், அதிகாரிகள் சிலர், Amy-Leeயிடம் சம்பவம் குறித்து கேட்க, அவள் விலாவாரியாக தன்னை கடத்திய நபர்கள் குறித்து விளக்கினாள்.

நள்ளிரவுக்குமுன் Amy-Lee குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில், 27 மற்றும் 40 வயதுடைய பெண்கள் இருவர் மற்றும் 50 வயது ஆண் ஒருவர் என மொத்தம் மூன்றுபேரை கைது செய்தனர் பொலிசார்.

அவர்களில் ஒருவரைப் பார்த்த Amy-Leeயின் தந்தை Wynand அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெண் Wynandஇன் மகனான Jaydenஇன் ஆசிரியை!

அவரை எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நன்றாக தெரியும் என்றார் Wynand. இதற்கிடையில் இந்த கூட்டத்தில் உள்ள மற்ற கடத்தல்காரர்களையும் பிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்