வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளை சோதித்த அதிகாரிகள்... சிக்கியது என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

விமானநிலையங்களில் அதிகாரிகள் பயணிகளிடம் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கொண்டுவரப்படுவதாக கோயமுத்தூர் விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் அதிகாரிகள், மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், ஏர் அரேபியா விமானத்தில் துபாயிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்த கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இரண்டு பயணிகளிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின் கோலாலம்பூரிலிருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 4 பேரிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் ஒன்று சிக்கவில்லை, அதன் பின் தீவிரமாக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அவர்கள் தங்கத்தை மலக்குடலில் மறைத்து வைத்து எடுத்து செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து ஒரு கோடியே 31லட்சத்து 20 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 382 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்