விமானத்தில் மனைவிக்காக 6 மணி நேரம் கணவன் செய்த செயல்... வெளியான புகைப்படம்: குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பயணிகள் விமானத்தில் மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் கணவன் விமானத்திலே நின்று வந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உலகில் கணவன்மார்கள் நான் என் மனைவியை அந்தளவிற்கு காதலிக்கிறேன் என்று வார்த்தையாக கூறுவார்கள், ஆனால் அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியாது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படத்தில், பெண் ஒருவர் விமானத்தின் இருக்கையில் படுத்திருக்கிறார். அருகில் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார்.

அந்த நபர் வேறு யாருமில்லை, அவர் அந்த பெண்ணின் கணவர் எனவும், ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக மனைவி விமானத்தில் தூங்கியுள்ளார். அவரின் தூக்கத்தை கெடுக்க கூடாடு என்பதற்காக, கணவன் 6 மணி நேரம் விமானத்தில் நின்ற படியே பயணம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கும், அதனால் அவர் தன் மனைவிக்காக நின்று கொண்டு வருகிறார். இதற்கு பெயர் தான் உண்மையான காதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானத்திலே பயணம் செய்த பெண் ஒருவர், இந்த நபர் 6 மணி நேரம் நின்று கொண்டே மனைவிக்காக பயணம் செய்தார். இது தான் உண்மையான காதல், என்னுடைய சிறிய போக்குவரத்தில் நல்ல ஒரு அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்